ஜியோ மற்ற போட்டியாளர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் புத்தாண்டு திட்டத்தில் 24 நாட்கள் எக்ஸ்ட்ரா வேலிடிட்டி உடன் வருடாந்திர ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. ரிலையன்ஸ் ஜியோ ஒவ்வொரு ஆண்டும் அறிமுகப்படுத்துவது போல் இந்த புத்தாண்டிலும் புதிய ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது வருடாந்திர ரீசார்ஜ் திட்டமாகும். புதிய திட்டம் ரூ. 2999 விலையில் 365 நாட்கள் வேலிடிட்டி கொண்டிருக்கும். அதோடு 2024 புத்தாண்டு சலுகையாக கூடுதலாக 24 நாட்கள் வேலிடிட்டி வவுச்சரை வழங்குகிறது.
இந்த திட்டத்தில் 912.5 ஜிபி மொத்த டேட்டா அலவன்ஸை வழங்குகிறது, அதிவேக டேட்டா ஒரு நாளைக்கு 2.5 ஜிபி வரை வழங்கப்படுகிறது. மேலும் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வாய்ஸ் கால் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ்-ஐ பெறலாம்.
ஜியோவின் மற்ற திட்டங்களைப் போலவே ஜியோ பயன்பாடுகளான ஜியோ டி.வி, ஜியோ சினிமா மற்றும் ஜியோ கிளவுட் ஆகியவையும் இலவசமாக பயன்படுத்தலாம். அதோடு அன்லிமிடெட் 5ஜி சேவையையும் இலவசமாக பெறலாம். இந்த புதிய ப்ரீபெய்ட் திட்டத்தை ஜியோ வெப்சைட், மை ஜியோ ஆப் ஆகியவற்றில் பெறலாம்.