கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவதற்காக 8 தாசில்தார் மற்றும் 101 துணை வட்டாசியர் பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவதற்காக 8 தாசில்தார் மற்றும் 101 துணை வட்டாசியர் பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் கலைஞர் மகளிர் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் கடந்த செப். 15ம் தேதி தொடங்கி வைத்தார். மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்துக்காக ஒரு கோடியே 63 லட்சம் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்ட நிலையில் முதல்கட்டமாக ஒரு கோடியே 6 லட்சம் மகளிர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மாதம் ரூ.1000 வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.
தொடர்ந்து, மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களில் சுமார் 11 லட்சம் பேர் முறையீடு செய்திருந்தனர். அவர்களில் 7 லட்சத்து 35 ஆயிரம் பேர் தகுதியானவர்களாகக் கண்டறியப்பட்டு அவர்களுக்கும் நவம்பர் மாதம் முதல் மகளிர் உரிமைத் தொகை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், இந்தாண்டில் புதிதாக உரிமைத் தொகைக்காகன விண்ணப்பங்கள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வட்டாட்சியர் பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.