200 யூனிட் இலவச மின்சாரம், பெண்கள் நடத்தும் சுயஉதவி குழுக்களுக்கு கடனுதவி மற்றும் எல்.பி.ஜி சிலிண்டருக்கு ரூ.500 மானியம் வழங்கப்படும் என சத்தீஸ்கர் மாநிலத் தேர்தலையொட்டி பிரியங்கா காந்தி வாக்குறுதி.
சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலங்கான உள்பட 5 மாநிலங்களுக்கு நவம்பர் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவைக்கு வரும் நவ.7,17-ம் தேதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.சத்தீஸ்கரில் பூமேஷ் பாகல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடிக்க தீவிரம் காட்டி வருகிறது. காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பிரியங்கா காந்தி வத்ரா நேற்று (அக்.30) சத்தீஸ்கரில் 2 பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு பேசினார். அப்போது 8 வாக்குறுதிகளை அளித்தார். வாக்குறுதிகளின் சிறப்பம்சமாக, சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ. 500 மானியமாக வழங்கப்படும் என்று கூறினார். புதிதாக உருவாக்கப்பட்ட கைராகர்-சூய்காடன்-கண்டா மாவட்டத்தில் (கே.சி.ஜி) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் உரையாற்றிய பிரியங்கா, கே.சி.ஜி என புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என இடைத்தேர்தலின் போது வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதை நாங்கள் நிறைவேற்றியுள்ளோம். குஜராத்தை விட சத்தீஸ்கர் மாதிரி சிறந்தது என்றார்.
பல்வேறு மாநிலங்களில் உள்ள காங்கிரஸ் அரசு பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டுவந்துள்ளது. 20 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் ஒருவர், ஓய்வு பெற்ற பிறகு சில நிதி பாதுகாப்பை எதிர்பார்க்கிறார். நெற்பயிருக்கு வ்வளவு பணம் கிடைக்கும் என்று மத்திய பிரதேச மக்களிடம் நான் கேட்டபோது அவர்கள் அமைதியாக இருந்தனர். இனவாத அரசியலின் தாக்கத்திற்கு ஆளாகாமல், நாங்கள் செய்த பணியின் அடிப்படையில் நீங்கள் வாக்களிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன் என்றார்.
மேலும், வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம், பெண்கள் நடத்தும் சுயஉதவி குழுகளுக்கு கடனுதவி மற்றும் சக்ஷம் அரசு திட்டத்தின் கீழ் உள்ள கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று பிரியங்கா உறுதியளித்தார். தொடர்ந்து பேசிய அவர், மாநிலத்தில் உள்ள அனைத்து 6,000 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளும் சுவாமி ஆத்மானந்த் ஆங்கிலம் மற்றும் இந்தி பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். விபத்தில் காயமடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும். 6,000க்கும் மேற்பட்ட போக்குவரத்து வணிக உரிமையாளர்களுக்கு 2018 முதல் ரூ.726 கோடி மோட்டார் வாகன வரி மற்றும் வட்டி தள்ளுபடி செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
இதையடுத்து முதல்வர் பூபேஷ் பாகேல் பேசுகையில், “காங்கிரஸின் 8 வாக்குறுதிகள் ஏக்கருக்கு 15 குவிண்டால்களில் இருந்து 20 குவிண்டால் அரிசி கொள்முதல், விவசாயிகளுக்கான கடன் தள்ளுபடி, 17.50 லட்சம் ஏழைகளுக்கு ஆவாஸ் (வீடு) யோஜனா, காடு தயாரிப்புகளுக்கு மேலும் ரூ.10 எம்.எஸ்.பி. , ரூ.10 லட்சம் வரை இலவச சுகாதார சேவை, மற்றும் அனைத்து அரசு நிறுவனங்களிலும் எல்.கே.ஜி முதல் முதுநிலை பட்டப் படிப்பு வரை கல்வி இலவசம் என்று கூறினார். மேலும், நாட்டிலேயே முதல் முறையாக நிலமற்ற விவசாயிகளுக்கு உதவித்தொகை ஆண்டுக்கு ரூ.10,000 ஆக உயர்த்தப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.