90களில் பிஸியாக இருந்த இந்திய சினிமாவின் பிரபலமான முகங்களில் ரம்பாவும் ஒருவர். விஜயலட்சுமி என்ற இயற்பெயரைக் கொண்ட ரம்பா ரஜினிகாந்த், அஜித், விஜய், சல்மான் கான், சிரஞ்சீவி மற்றும் மம்முட்டி உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்துள்ளார்.
கனடாவைச் சேர்ந்த தொழிலதிபர் இந்திரன் பத்மநாதனை திருமணம் செய்த பின்னர் 2010 இல் நடிப்பதை விட்டுவிட்டு கனடாவுக்குச் சென்றார். அவருக்கு மூன்று குழந்தைகள், அதாவது இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர்.இந்தநிலையில், நடிகை ரம்பா தனியார் யூடியூப் சேனலுக்கு தனது திரைப்பயணம் குறித்து பேட்டியளித்துள்ளார்.
அந்த வீடியோவில், மலையாள படத்தில் ரம்பா கேரக்டரில் நடித்தது முதல் ரம்பா பெயர் எனக்கு வந்தது. எனக்கு ஸ்கூல் போக விருப்பம் இருந்தது இல்லை. முதல் படத்தில் ஹீரோயின் வாய்ப்பு கிடைத்ததை என்னால் நம்ப முடியவில்லை. நான் பார்த்த முதல் தமிழ் படம் ராமராஜன் நடித்த எங்க ஊரு பாட்டுக்காரன். தெலுங்கில் அதே செண்பகமே செண்பகமே பாடலில் நான் நடித்தேன்.
தமிழில் முதல் படமாக வந்த உழவனில் சிறிய பாத்திரம் என்பதால் ஏமாற்றமடைந்தேன். தமிழில் முதல் 2 படத்திலும் ஏ.ஆர்.ரஹ்மான் தான் இசை, ஆனால் அவரை நேரில் சந்தித்ததில்லை. இன்ஸ்டாகிராம் அவரை ஃபாலோவும் பண்ணவில்லை.உள்ளத்தை அள்ளித்தா படம் வேற ஒரு பெரிய ஹீரோயின் நடிக்க வேண்டியது. இந்த படம் தமிழில் எனக்கு பெரிய வெற்றியைக் கொடுத்தது. வாலி படம் நான் பண்ண வேண்டியது. ஆனால் வருத்தமில்லை.