சீனாவில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டு போட்டியில் வெண்கல பதக்கம் வென்று கோவை திரும்பிய வீரருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சீனாவில் ஆசிய அளவிலான பாரா விளையாட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமானோர் பங்கேற்றனர். இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பாரா தடகள போட்டியில் 8 வீரர் வீராங்கனைகளும், பாரா இறகு பந்து போட்டியில் 6 வீரர் வீராங்கனைகளும், பாரா வால் வீச்சு போட்டியில் ஒரு வீராங்கனைகளும் பங்கேற்றனர்.
இதில், கோவையை சேர்ந்த வீல் சேர் பாரா தடகள வீரர் முத்துராஜ் குண்டு எறிதல், வட்டு எறிதல் பிரிவில் இரண்டு வெண்கல பதக்கம் பெற்று முதல் முறையாக சாதனையை படைத்துள்ளார். பதக்கங்களை வென்று கோவை திரும்பிய மாற்றுத்திறனாளி வீரருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், இவருக்கு இந்திய பிரதமர், தமிழக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.