ஆளுநர் மாளிகை தரப்பில் இருந்து அறிக்கைகளாக வெளிவந்தது பொய் குற்றச்சாட்டு என்று தமிழ்நாடு காவல்துறை தெரிவித்துள்ளது. கருக்கா வினோத்தை போலீசார் பிடிக்கும் வீடியோ காட்சிகள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு டி.ஜி.பி சங்கர் ஜிவால் விளக்கம் அளித்துள்ளார்.

ஆளுநர் மாளிகை குண்டு வீச்சு விவகாரம் தொடர்பாக டிஜிபி சங்கர் ஜிவால், ஆணையர் சந்திப் ராய் ராத்தோர் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டது. அதில் நந்தனத்தில் இருந்து சைதாப்பேட்டை பாலம் வழியாக ஆளுநர் மாளிகை சாலையில் கருக்கா வினோத் தனியாக நடந்து வரும் காட்சி வெளிடப்பட்டது.
கும்பலாக வந்து ஆளுநர் மாளிகைக்குள் நுழைய முற்பட்டதாக கூறியது பொய் என்றும் ஆளுநர் மாளிகை நுழைவாயில் எரித்து சேதப்படுத்தப்பட்டது பொய் என்றும் தமிழ்நாடு காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. மேலும் கருக்கா வினோத்தை ராஜ்பவன் ஊழியர்கள் பிடித்ததாக கூறியது பொய் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது.மேலும் கருக்கா வினோத் ஆளுநர் மாளிகைக்கு வெளியே பெட்ரோல் குண்டுகளை வைக்கும் படங்களும், அவரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி, பிடிக்கும் படங்களும் வெளியிடப்பட்டுள்ளது.