வாட்ஸ்அப் உலகம் முழுவதும் ஏராளமான பயனர்களைக் கொண்டுள்ளது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. பொதுவாக வாட்ஸ்அப் ஒரு அம்சத்தை அறிமுகம் செய்யும் முன் பீட்டா அப்டேட் வெளியிடும். அது அந்த அம்சம் குறித்தான சோதனை ஆகும். அனைத்து பயனர்களுக்கும் அறிமுகப்படுத்தும் முன் அந்த அம்சத்தில் உள்ள bug மற்றும் பிற பிரச்சனைகளை கண்டறிய உதவும்.
எனவே, வாட்ஸ்அப் பீட்டா அப்டேட் பொதுவாக ஒரு புதிய அம்சங்களை அறிமுகம் செய்ய உதவும். ஆனால் இந்த முறை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் அப்டேட்டில் ஏற்பட்டிருக்க கூடிய bug சரி செய்ய அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு பீட்டா வெர்ஷன் 2.24.3.15, வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் அப்டேட்டில் ஏற்பட்டிருக்க கூடிய bug சரி செய்ய அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதன் படி பயனர்கள் சமீபத்திய வெர்ஷன் வாட்ஸ்அப்பிற்கு தங்கள் செயலியை அப்டேட் செய்யும் படி கூறப்பட்டுள்ளது.மேலும், வாட்ஸ்அப் அதன் தளத்தில் மூன்றாம் தரப்பு ஷேட் ஆதரவையும் வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. இது ஐரோப்பிய ஒன்றியத்தின் டிஜிட்டல் மார்க்கெட் சட்டத்தைப் (டிஎம்ஏ) பின்பற்றி வருகிறது.