வங்கதேசத்தில் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஷேக் ஹசீனா தலைமையிலான ஆளும் அவாமி லீக் கட்சி போட்டியிட்ட 300 தொகுதிகளில் 222 இடங்களை வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. பிரதான எதிர்க்கட்சியான வங்கதேசம் தேசியவாதக் கட்சி (BNP) மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தேர்தலில் புறக்கணிக்கப்பட்டது. ஜாதியா கட்சி 11 இடங்களையும், தொழிலாளர் கட்சி, ஜாதிய சமாஜ்தந்திரிக் தளம் மற்றும் வங்கதேசம் கல்யாண் கட்சி தலா ஒரு இடத்தையும், மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் 62 இடங்களில் வெற்றி பெற்றனர்.
ஆளும் அவாமி லீக் கட்சி ஆட்சியை தக்கவைத்துள்ள நிலையில், அதன் தலைவரான ஷேக் ஹசீனா ஐந்தாவது முறை பிரதமராக அரியனையேறுகிறார். இது வங்கதேச வரலாற்றில் பெரிய மைல்கல். 2026 ஆம் ஆண்டளவில் வங்கதேசம் குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகளின் (LDCs) குழுவிலிருந்து பெரிய பாய்ச்சலை போட உள்ளது. அத்துடன் வளரும் நாடுகளான இந்தியா மற்றும் சீனா உள்ள அட்டவணையில் இடம் பிடிக்க உள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை வங்கதேச நாட்டின் மிகப்பெரிய ஆங்கில நாளிதழான தி டெய்லி ஸ்டாரின் ஆசிரியரும், வெளியீட்டாளருமான மஹ்ஃபுஸ் ஆனம், ஹசீனாவின் வெற்றியில் கண்ணுக்குத் தெரிகிறதை விட அதிகம் இருக்கிறது என்று தனது கட்டுரையில் தீவிரமாக சுட்டிக்காட்டினார். கிளர்ச்சியாளர்கள் வென்ற இடங்கள், அவர்களில் பெரும்பாலோர் "வாழ்நாள் முழுவதும் அவாமி-லீக் கட்சியினராக இருந்தர்வர்கள்", அடுத்ததாக அவாமி லீக்கின் "ஆசீர்வாதம்" பெற்ற ஜாதியா கட்சி மற்றும் இரண்டு கூட்டணிக் கட்சிகள் உள்ளன. இவற்றுடன் “பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட 50 இடங்களைச் சேர்த்தால், அதில் பெரும்பான்மையானவை அவாமி லீக்கிற்குச் செல்லும். ஹசீனா, 350 பேர் கொண்ட ஒரு அவையில் மொத்தம் 338 எம்.பி.க்களை உருவாக்கி, கூடுதலாக 45 பேரை எளிதாகக் கோரலாம். அப்படியானால், இதை ஒரு கட்சி ஆட்சி என்பதைத் தவிர வேறு எதுவும் கூற முடியுமா? ”என்று ஹசீனாவின் அதிருப்தியை ஒடுக்கும் முடிவில் இருந்த மஹ்ஃபுஸ் ஆனம் எழுதினார்.