அதிமுக ஐ.டி பிரிவு சார்பாக அவசர கால தொடர்பு எண்களை அறிவித்துள்ளனர். சென்னையை 18 பகுதிகளாக பிரித்து உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயல் காரணமாக அதிமுகவின் ஐ.டி பிரிவு சார்பாக உதவி எண்களை அறிவித்துள்ளனர். குறிப்பாக சென்னை மற்றும் புறநகரை பொறுத்தவரையில் 18 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும், 3 எண்கள் என்று 18 சட்டமன்ற தொகுதிக்கும் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். இதில் ”தற்காலிக பாதுகாப்பான தங்குமிடங்களை அடைவதற்கு போக்குவரத்து சம்பந்தமான தொடர்புகளை ஒருங்கிணைத்தல் மற்றும் உதவுதல். தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மருத்துவ அவசர பதில்களை ஒருங்கிணைத்து முடிந்தவரை உதவிகளை வழங்குதல்.
தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் உணவுக்கான தகவல்தொடர்புகளை எளிதாக்குதல் மற்றும் ஒருங்கிணைத்தல். விழுந்த மரங்கள், தண்ணீர் தேங்குதல், மின்சார பிரச்சனைகள் மற்றும் மெட்ரோ நீர் விநியோகம் ஆகியவற்றிற்கு மாநகராட்சி சேவை ஊழியர்களுடன் ஒருங்கிணைப்பு மற்றும் தொடர்பு. NDMA வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, பொது மக்களில் ஒருவராக குடிமக்களின் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலைகளில் உதவுதல். போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.