2024 புத்தாண்டின் முதல் மாதத்தில் ஜனவரியில் சாம்சங், ஒன் பிளஸ், ரெட்மி உள்ளிட்ட முன்னணி ப்ராண்டுகளிடமிருந்து பட்ஜெட், மிட் ரேஞ், பிரீமியம் வகை போன்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. சாம்சங் எஸ்24 சீரிஸ் மற்றும் ஒன் பிளஸ் 12 சீரிஸ் ஆகியவை பிரீமியம் வகை ஸ்மார்ட் போன்களாக இருக்கும்.
சாம்சங் எஸ்24 சீரிஸ் (Samsung Galaxy S24 Series)
சாம்சங் எஸ்24 சீரிஸில் 3 மாடல் போன்கள் எஸ்24, எஸ்24 ப்ளஸ், எஸ்24 அல்ட்ரா ஆகியவை அறிமுகம் செய்யப்பட உள்ளன. இந்த போன்கள் Snapdragon 8 Gen 3 ப்ராசஸர், கேமரா அமைப்பில் (அல்ட்ராவில் 200MP ப்ரைமரி சென்சார் உட்பட) மிகவும் நேர்த்தியான கேமரா அமைப்பு கொண்டுள்ளது. ஜனவரி 17-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒன்பிளஸ் 12 சீரிஸ் (OnePlus 12 Series)
ஒன்பிளஸ் அதன் அடுத்த முதன்மையான ஒன்பிளஸ் 12 மற்றும் 12ஆர் ஆகிய இரண்டு வகைகளை பிரீமியம் வகை போன்களை இந்த ஜனவரியில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜனவரி 23-ம் தேதி அறிமுகமாகும் என கூறப்படுகிறது.
மிட் ரேஞ் போன்கள்
ரெட்மி நோட் 13 சீரிஸ் - ஜியோமியின் பிரபலமான பட்ஜெட் தொடரான Note 13 தொடருடன் மேம்படுத்தப்பட்ட போன்கள் அறிமுகம் செய்யப்படுகிறது. ஜனவரி 4-ம் தேதி அறிமுகம் ஆகிறது. Poco X6 சீரிஸ்- ஜியோமியின் துணை பிராண்டான Poco, அதன் X6 சீரிஸை ஜனவரி மாதத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது. இந்த ஃபோன்கள் பணத்திற்கான வலுவான மதிப்பை வழங்குகின்றன.
விவோ X100 சீரிஸ் : விவோ X100 சீரிஸ் அதன் நேர்த்தியான வடிவமைப்பு, வளைந்த AMOLED டிஸ்ப்ளே மற்றும் சக்திவாய்ந்த MediaTek Dimensity 9300 சிப்செட் ஆகியற்றை கொண்டுள்ளது. எக்ஸ்100 ப்ரோ மாறுபாடு கூடுதல் கேமரா அம்சங்கள் மற்றும் வேகமான சார்ஜிங் திறன்களைக் கொண்டுள்ளது. ஜனவரி 4-ம் தேதி ரெட்மி உடன் இந்த போனும் வெளியாகிறது.
மற்ற ப்ராண்ட் போன்கள்
Asus ROG Phone 8 Series- பிரத்யேக கேமிங் அம்சங்கள் மற்றும் தனித்துவமான வடிவமைப்பு உடன் இந்த மாதம் Asus ROG 8 Series போன் அறிமுகம் செய்யப்படுகிறது.