
தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகத்தின் 2 வது பட்டமளிப்பு விழாவில், பாடகி சுசிலா தவறி விழச் சென்றார், அப்போது முதல்வர் வரை பிடித்துக்கொண்டார்.
சென்னை கலைவாணர் அரங்கில், தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழத்தின் 2வது பட்டமளிப்பு விழா இன்று காலை நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவில் 3,226 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் தேன் இசை குரலுக்கு சொந்தக்காரரான பாடகி பி.சுசிலா அவர்களுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. அவருக்கு முதல்வர் ஸ்டாலின் கெளரவ டாக்டர் பட்டம் வழங்கினார். இந்த பட்டத்தை வழங்கும்போது, பாடகி சுசிலா தவறி விழச்சென்றார். அவரை முதல்வர் ஸ்டாலின் மற்றும் சுற்றி இருந்தவர்கள் பிடித்துகொண்டனர் .
இந்நிகழ்ச்சியில் பாடகி பி. சுசிலாவுக்கு கொளரவ டாக்டர் பட்டம் வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின், ’நீ இல்லாத உலகத்திலே’ என்று பி.சுசிலா பாடிய பாடலை பாடி, அவரை சிறப்பித்து பேசினார்.