பொங்கல் பண்டிகை விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்களால்வண்டலூர்- தாம்பரம், ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.சென்னையில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் பொங்கல் பண்டிகை கொண்டாட தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர். 5 நாட்கள் தொடர் விடுமுறையை அடுத்து மக்கள் சொந்த ஊர்களிலிருந்து இப்போது சென்னைக்கு திரும்பி வருகின்றனர்.
பிற ஊர்களில் இருந்து சொந்து ஊர்களுக்கு மக்கள் செல்வதற்காக ஜனவரி 16 முதல் 18-ஆம் தேதி வரை 17,581 சிறப்பு பேருந்கள் இயக்கப்பட்டு வருகிறது.நேற்று இரவு வெளியூர்களில் புறப்பட்ட பேருந்துகள் அனைத்தும் இன்று காலை சென்னையை நோக்கி வந்து கொண்டிருப்பதால் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சிங்கப்பெருமாள் கோயில் அருகே சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு நிற்கும் வாகனங்கள் அங்குலம் அங்குலமாகவே நகர முடிகிறது.இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.பொங்கல் பண்டிகைக்கு பிறகு 17,589 பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றில் சென்னையை நோக்கி மட்டுமே 11,006 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அவை அனைத்துமே கிளம்பாக்கம் வரையில் தான் இயக்கப்படுகின்றன. அதனால் கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் வந்திறங்கும் பயணிகள் வசதிக்காக இலவச மினி பேருந்து இயக்கப்படுகின்றன.
எதிர்பார்த்ததை விட பயணிகளின் எண்ணிக்கை குறைந்த அளவில் காணப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்த நிலையில் 2024-பொங்கல் திருநாளை முன்னிட்டு, பிற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் பேருந்துகள் குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டுள்ள தகவலின் படி.2024 பொங்கல் திருநாளை முன்னிட்டு, பயணிகளின் வசதிக்காக பிற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் அரசு விரைவுப் போக்குவரத்து கழகத்தைச் சார்ந்த அனைத்துப் பேருந்துகளும் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம், கிளாம்பாக்கத்திற்கு வந்தடையும். மேலும் கிளாம்பாக்கத்தில் இருந்து சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு மாநகர் போக்குவரத்து கழகத்தின் சார்பில் தொடர்ந்து பேருந்துகள் இயக்கப்படும்.மேலும், பிற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் மற்ற போக்குவரத்து கழகங்களை சார்ந்த அனைத்துப் பேருந்துகளும் கோயம்பேடு பேருந்து நிலையம் வரை இயக்கப்படும், என மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.