சென்னையில் நடக்கவிருந்த, ஃபார்முலா 4 கார் பந்தயம் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னையில் கடந்த 9, 10ம் தேதிகளில் நடைபெற இருந்த பார்முலா 4 கார் பந்தயம் மிக்ஜாம் புயல் காரணமாக ஒத்திவைக்கபட்டது. இந்த போட்டிகள் தீவுத்திடல் மைதானத்தைச் சுற்றியிருக்கும் 3.5 கி.மீ சுற்றளவு சாலைகளில் இரவுப் போட்டியாக நடத்த திட்டமிடப்பட்டது.
சென்னை வெள்ள பாதிப்புக்கு மத்தியில் கார் பந்தயம் நடத்துவதில் பல்வேறு சிக்கல் இருப்பதால், கார் பந்தயம் ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.இதைத்தொடர்ந்து ஃபார்முலா 4 கார் பந்தயம் 15, 16 தேதிகளில் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் இது காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மீண்டும் எப்போது நடத்தப்படும் என்பது குறித்த தகவல் தெரிவிக்கப்படவில்லை.