கேரளா மாநிலம் காசர் கோட்டில் தாத்தா வீட்டிற்குள் ஓட்டி வந்த காரின் முன் சக்கரத்தில் சிக்கி 2 வயது குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கேரளா மாநிலம் காசர்கோடை சேர்ந்தவர் நாசர். இவருக்கு 6 மற்றும் 2 வயதில் இரு மகன்கள் உள்ளனர். இருவரும் கடந்த வாரம் வீட்டின் முன் வாசலில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது குழந்தைகளின் தாத்தா வீட்டிற்குள் காரை நிறுத்துவதற்காக வந்துள்ளார்.
கார் நிறுத்துமிடத்தில் இருவரும் சைக்கிளில் விளையாடி வந்த நிலையில் மூத்த பையன் தனது தாத்தா காரை நிறுத்த வசதியாக சைக்கிளை ஓரமாக எடுத்துள்ளார். அப்போது 2 வயது குழந்தை காரின் முன்னால் ஓடி நின்றுள்ளார். இதை கவனிக்காத நிலையில் தாத்தா காரை முன்னால் எடுக்க முயற்சிக்க எதிர்பாராத விதமாக குழந்தை காரின் முன் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கியது.
குழந்தை அலறிய நிலையில் 5 வயது சிறுவன் அலறியடித்து ஓடி தாத்தாவிடம் கூறினார். உடனடியாக காரில் இருந்து இறங்கி வந்த தாத்தா குழந்தையை எடுத்து கதறினார். பலந்த காயமடைந்த குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இந்த விபத்து கடந்த வாரம் நடந்த நிலையில், தற்போது இது தொடர்பான சி.சி.டி.வி காட்சி வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.