பொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊர் செல்பவர்களுக்கு அரசு விரைவுப் பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு தொடக்கியுள்ளது. பயணிப்பதற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி உள்ளது. எப்போதும் பொங்கல் பண்டிகைக்கு 4 நாட்கள் அரசு விடுமுறை அளிக்கப்படும். அதன்படி வெளியூரில் தங்கி பணிபுரியும் அல்லது படிக்கும் மக்கள்.
அதன் படி, தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகை அடுத்த மாதம் ஜனவரி 2024-ல் 15-ம் தேதி கொண்டாடப் பட உள்ளது. பொங்கல் பண்டிகைக்கு முந்தைய தினம் ஜனவரி 14 போகி பண்டிகை, 15-ம் தேதி தைப் பொங்கல், 16-ம் தேதி மாட்டுப் பொங்கல், 17-ம் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.ஊர்களுக்கு சென்று பொங்கல் பண்டிகை கொண்டாடி வருவர்.
இதையொட்டி 4 நாட்கள் விடுமுறை விடப்படும் .மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல வசதியாக சென்னை, கோயம்புத்தூர், திருநெல்வேலி மற்றும் பல ஊர்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அந்த வகையில் அடுத்தாண்டு பொங்கல் பண்டிகையை யொட்டி அரசு விரைவுப் பேருந்துகளில் பயணிப்பதற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி உள்ளது. பயணிகள் நேரிலும், டிக்கெட் முன்பதிவு மையத்திலும், www.tnstc.in மற்றும் tnstc செயலி வாயிலாகவும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என போக்குவரத்து துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.