சீரகத் துவையல் செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
சீரகம் – கால் கப்
இஞ்சி – சிறிதளவு
சின்ன வெங்காயம் – 5
புளி – சிறிதளவு
காய்ந்த மிளகாய் – 5
எண்ணெய் – 1 தேக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சீரகம், இஞ்சி, சின்ன வெங்காயம், புளி, காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கி எடுக்கவும். கலவை ஆறியதும் உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு மிக்ஸியில் போட்டு கெட்டியாக அரைக்கவும் அவ்வளவு தான். தேவைப்பட்டால் அதே எண்ணெய்யில் சிறிதளவு கடுகு, பெருங்காயம் சேர்த்து தாளித்து துவையலில் சேர்க்கலாம். அவ்வளவு தான் சுவையான சீரகத் துவையல் ரெடி. சுடு சோற்றுடன் வைத்து சாப்பிட அருமையான இருக்கும்.