இந்தியாவில் தங்கம் விலை ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இதனிடையே, இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நிலவிய போர் காரணமாக டிசம்பர் தொடக்கத்தில் குறைந்து வந்த தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.இந்நிலையில், கடந்த திங்கள் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்தது. இதேபோல், மறுநாள் செவ்வாய்கிழமை சவரனுக்கு ரூ.80 சரிந்தது.
புதன்கிழமை தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இன்றி முந்தைய விலையில் விற்பனை செய்யப்பட்டது. நேற்று வியாழக்கிழமை தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் ரூ.46,480-க்கும், கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,810-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், இன்றும் தங்கம் விலை சற்று அதிகரித்துள்ளது. அதன்படி, இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.46,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.5,820-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.24 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 6,914-க்கும், ஒரு சவரன் ரூ. 55,312-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் கடந்த 2 நாட்களாக எந்தவித மாற்றமுமில்லை. ஒரு கிராம் ரூ.77.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.77,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.