ஆண்ட்ராய்டு போன்களில் அறிமுகம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து மைக்ரோசாஃப்ட்டின் கோபைலட் ஏ.ஐ இப்போது ஐபோன், ஐ பேட்களில் இலவசமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஜி.பி.டி-4 மூலம் இயங்கும் மைக்ரோசாஃப்ட்டின் கோபைலட் (Copilot ) சாட்போட் இப்போது ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ் சாதனங்களில் இலவசமாகக் கிடைக்கிறது. இந்த பிரத்யேக பயன்பாடுஜெனரேட்டிவ்-ஏஐ இமேஜ் ஜெனரேட்டருடன் இணைந்து ஓபன் ஏ.ஐ-ன் சமீபத்திய LLM GPT-4க்கான அணுகலை வழங்குகிறது. மேலும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ஜெனரேட்டிவ் ஏ.ஐ உடன் வரக்கூடிய சர்ஃபேஸ் லேப்டாப் ( Surface laptops) இந்தாண்டு 2024-ல் அறிமுகம் செய்ய உள்ளது.
மைக்ரோசாப்டின் GPT-4 இயங்கும் Copilot பயன்பாடு இப்போது iPadகள் மற்றும் iPhone களுக்குக் கிடைக்கிறது. சாட்பாட், இமேஜ் ஜெனரேட்டர், மியூசிக் ஜெனரேட்டர் மற்றும் பலவற்றை இலவசமாக அணுக, மைக்ரோசாஃப்ட் கணக்கைப் பயன்படுத்தி பயனர்கள் உள்நுழையலாம், அதே சமயம் ChatGPT Plus சந்தா இந்தியாவில் மாதத்திற்கு ரூ. 2,000 ஆகும்.
மைக்ரோசாப்ட் நிறுவனம் 2024-ல் AI திறன்களைக் கொண்ட அடுத்த தலைமுறை சர்ஃபேஸ் பிசிக்களை அறிமுகப்படுத்தவுள்ளது. இன்டெல் அல்லது ஆர்ம் ப்ராசஸர் மூலம் இயக்கப்படும். சர்ஃபேஸ் லேப்டாப் 6 மற்றும் சர்ஃபேஸ் ப்ரோ 10 ஆகியவை ஸ்னாப்டிராகன் எக்ஸ் சீரிஸ் அடிப்படையில் ஒரு பிரத்யேக நியூட்ரல் செயலாக்க அலகு (NPU) கொண்டிருக்கும். அல்லது சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட 14-வது ஜெனரல் இன்டெல் கோர் அல்ட்ரா உடன் வரும் எனக் கூறப்படுகிறது.