வாட்ஸ்அப்-ல் இருப்பது போன்று கூகுள் மேப்ஸ் செயலிலேயே லைவ் லொகேஷன் ஷேரிங் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதோடு Estimated time of arrival என்பதையும் கூகுள் மேப்ஸ் புது வசதி காட்டுகிறது.
கூகுள் மேப்ஸ் செயலி உலகம் முழுவதும் உள்ள மில்லியன்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படுகிறது. கூகுள் நிறுவனத்தால் வழங்கப்படும் இந்த செயலி தற்போது புதிய வசதிகளைப் பெற்றுள்ளது. அதுவும் பயனர்கள் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட வசதியாகும்.
அதாவது, கூகுள் மேப்ஸ் செயலியில் இருந்தே மற்றவர்களுக்கு உங்களுடைய லைவ் லொகேஷனை ஷேர் செய்யலாம். வாட்ஸ்அப், டெலிகிராமில் இருப்பது போலவே இதிலும் எளிதாக லைவ் லொகேஷன் ஷேர் செய்யலாம். எவ்வளவு நேரம் ஷேர் செய்ய வேண்டும் என்பதையும் குறிப்பிடலாம். அதோடு, உங்களுடைய Estimated time of arrival-யும் கூகுள் மேப்ஸ் புது வசதி காட்டுகிறது.
மேலும், வாட்ஸ்அப், டெலிகிராம் செயலி போல் அல்லாமல் கூகுள் மேப்ஸில் லைவ் லொகேஷன் பகிரும் போது மற்ற பிற செயலிக்கும் நீங்கள் பகிரலாம். வாட்ஸ்அப், டெலிகிராமில் மேப் பயன்படுத்தினால் அதில் உள்ளே மட்டுமே பகிர முடியும். கூகுள் மேப்ஸில் உங்கள் Location History’ ஆப் செய்யப்பட்டிருந்தால் லைவ் லொகேஷன்