காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே சனிக்கிழமையன்று எதிர்க்கட்சி தலைமையிலான இந்தியா கூட்டணியின் தலைவராக நியமிக்கப்பட்டார், அதே நேரத்தில் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்ட பீகார் முதல்வர் நிதிஷ் குமார், அனைத்துக் கட்சிகளும் உடன்பட்டால் மட்டுமே பதவியை ஏற்றுக்கொள்வேன் என்று கூறியதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
வரவிருக்கும் லோக்சபா தேர்தலின் போது தொகுதிப் பங்கீடு குறித்து விவாதிக்க 14 எதிர்க்கட்சிகளின் தலைவர்களின் காணொளி வாயிலான கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஆனால், இந்த சந்திப்பை திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி புறக்கணித்தார்.
முன்னதாக, ஐக்கிய ஜனதா தளம் கட்சி நிதிஷ் குமாரை கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்க அழுத்தம் கொடுத்து வந்தது. மறுபுறம், காங்கிரஸின் தேசிய கூட்டணிக் குழுவுடன் சீட் பகிர்வு பேச்சுவார்த்தையில் சேர திரிணாமுல் காங்கிரஸ் மறுத்த சில நாட்களுக்குப் பிறகு, அந்தக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்று அக்கட்சி கூறியது.