கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக கோவை சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் கனகராஜின் சகோதரர் தனபால் இரண்டாம் கட்ட விசாரணைக்கு ஆஜரானார்.அப்போது, “இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு உள்ளது; இதேபோல் பல கொலைகளை அவர் செய்துள்ளார். இதை என் தம்பி என்னிடம் கூறியுள்ளார்” எனப் பேசினார்.மேலும், எடப்பாடி பழனிச்சாமி, இளங்கோவன், தங்கமணி ,வேலுமணி ஆகியோர் கனகராஜை நேரடியாக மூளை சலவை செய்து இந்த விவகாரத்தில் ஈடுபடுத்தினர் என்றும் குற்றஞ்சாட்டினார்.
தொடர்ந்து, “சென்னையில் எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டில் 5 நாட்கள் கனகராஜை மூளை சலவை செய்தார்கள். அனைத்து உதவியும் செய்வதாக கனகராஜிடம் சொல்லி இருக்கின்றனர். எடப்பாடி பழனிச்சாமியை விசாரித்தால் எல்லாம் உண்மைகளும் தெரியவரும்” என்றார்.இந்த நிலையில் இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. தனி நீதிபதியின் இந்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிமன்றம் கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமி ஜன.30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் நேரில் ஆஜராக வேண்டும்.இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு விளக்கம் அளித்துள்ளது. அதில், “பொங்கல் விடுமுறை, சட்டப்பேரவை கூட்டத்திற்கு பின் நீதிமன்றத்தில் ஆஜராக தயாராக இருப்பதாக” தெரிவிிக்கப்பட்டுள்ளது.