அம்மா மக்கள் முன்னேற கழகத்தின் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் திண்டிவனத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் செயல்பட்டு வரும் அ.தி.மு.க.வுடன் அ.ம.மு.க. சேருவதற்கான வாய்ப்பே இல்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் பேசுகையில், "இந்தியா கூட்டணியில் இருந்து ஒவ்வொருவராக பிரிந்து வரும் நிலையில் பாராளுமன்ற தேர்தலின்போது அந்தக் கூட்டணியில் மு.க.ஸ்டாலின் மட்டும்தான் இருப்பார்.
கொடநாடு கொலை வழக்கில் சாட்சியங்களை எதிர்த்தரப்பினர் கலைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் காவல்துறையினர் சிறப்பான முறையில் விசாரணை நடத்தி வருகின்றார்கள் என்றும் அதில் அவர்கள் வெற்றி பெற வேண்டும். எடப்பாடி பழனிசாமி தலைமையில் செயல்பட்டு வரும் அ.தி.மு.க.வுடன் அ.ம.மு.க. சேருவதற்கான வாய்ப்பே இல்லை." என்று அவர் கூறினார்.