வெஜ் தோசை செய்வது குறித்து இங்கு பார்ப்போம். காய்கறிகள் சேர்த்த சுவை மற்றும் ஆரோக்கியமான வெஜ் தோசை செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
தோசை மாவு– தேவையான அளவு
பெரிய வெங்காயம் – 3
தக்காளி- 3
கேரட்- 4
பீன்ஸ் – 5
குடை மிளகாய் – தேவையான அளவு
நெய் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் கேரட் துருவி கொள்ளவும். வெங்காயம், தக்காளி, பீன்ஸ், குடை மிளகாயை பொடியாக நறுக்கவும். கடாயில் நெய் சேர்த்து எல்லா காய்களையும் பொன்னிறமாக வதக்கி எடுக்கவும். இப்போது தோசை கல் வைத்து மாவு ஊற்றி அதன் மேல் வதக்கிய காய்களை சிறிதளவு சேர்த்து சுற்றிலும் நெய் விடவும். தோசை வெந்ததும் சுட சுட பரிமாறலாம். ஹெல்தி, டேஸ்டி வெஜ் தோசை ரெடி.