டெலிகிராம், ஐ மெசேஜில் இருப்பது போல இனி சேட் (Chat) உள்ளே முக்கிய மெசேஜை மட்டும் தனியாக பின் ( Pin) செய்து விண்டோஸ் மேலே வைக்கலாம். இது எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம். மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் ஏராளமான பயனர்களைக் கொண்டுள்ளது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப நிறுவனம் புதிய புதிய வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது.
டெலிகிராம், ஐ மெசேஜில் இருப்பது போன்று வாட்ஸ்அப் சேட் உள்ளேயே மெசேஜ் மட்டும் தனியாக பின் செய்தும் அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தனிநபர் சேர் பக்கம் மற்றும் குரூப் பக்கத்திலும் இந்த அம்சத்தைப் பயன்படுத்தலாம். டெக்ஸ்ட், இமேஜி, போட்டோஸ் என எதுவாக இருந்தாலும் சேட் விண்டோஸ் மேலே பின் செய்யலாம். எனினும் டெலிகிராம் போன்று அதிக மெசேஜ்களை பின் செய்ய முடியாது. வாட்ஸ்அப்பில் ஒரு முக்கிய மெசேஜ் மட்டுமே பின் செய்ய முடியும்.
ஆண்ட்ராய்டு போனில் இந்த அம்சத்தைப் பயன்படுத்த, பின் செய்யப்பட வேண்டிய மெசேஜை long-press செய்து அடுத்து வலப்புறம் வரும் 3 புள்ளி மெனுவை கிளிக் செய்து ‘Pin’ என்பதைக் கொடுக்கவும். இப்போது மெசேஜ் பின் ஆகி சேட்-ல் நபரின் பெயருக்கு கீழே பின் மெசேஜ் காண்பிக்கப்படும். ஐபோனில் பின் செய்யப்பட வேண்டிய மெசேஜை Swipe செய்தால் Pin என்ற ஆப்ஷன் இருக்கும். எவ்வளவு நேரம் இந்த மெசேஜ் பின் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்பதையும் நீங்கள் முடிவு செய்யலாம். 24 மணி நேரம், 7 நாட்கள், 30 நாட்கள் என ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளது. Default ஆக 7 நாட்கள் வரை மெசேஜ் பின் செய்யப்பட்டிருக்கும்.