தமிழ் சினிமாவில் தன்னை ஏன் ஹாரிஸ் மாம்ஸ் என்று அழைக்கிறார்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ள இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் மேலும் வேட்டையாடு விளையாடு படம் குறித்து பேசியுள்ளது ரசிர்கள் கவனத்தை ஈர்த்து வருகிறது.கௌதம்மேனன் இயக்கத்தில் வெளியான மின்னலே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஹாரிஸ் ஜெயராஜ். இந்த படத்தின் பாடல்கள், பின்னணி இசை என அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், கெளதம்மேனன் அடுத்து இயக்கிய, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பச்சைக்கிளி முத்துச்சரம், வாரணம் ஆயிரம் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
அதேபோல், சாமி, அந்நியன், கஜினி, உன்னாலே உன்னாலே என பல படங்களுக்கு தனது இசையின் மூலம் ஹிட் பாடல்களை கொடுத்த ஹாரிஸ் ஜெயராஜ், கடைசியாக லெஜண்ட் படத்தில் இசையமைத்திருந்தார். இவரது இசையில் அடுத்து துருவநட்சத்திரம் படம் வெளியாக உள்ளது. இதனிடையே இன்று பிறந்த நாள் கொண்டாடும் ஹாரஸ் ஜெயராஜ், செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ளார்.இதில் உங்களை இணையத்தில் ஹாரிஸ் மாம்ஸ் என்று அழைக்கிறார்களே ஏன் என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர். எனது ட்விட்டர் (இப்போது எக்ஸ்) அக்கவுண்டை யாரோ ஹேக் செய்துவிட்டார்கள். 4 மாதங்களாக நான் ட்விட்டர் பயன்படுத்துவதில்லை என்று பதில் அளித்துள்ளார். அதேபோல் வேட்டையாளடு விளையாடு படத்தின் பாடல்கள் குறித்த கேள்விக்கும் பதில் அளித்துள்ளார்.
இதில், முதன் முதலில் வேட்டையாடு விளையாடு பாடல் வெளியான போது, ‘’பார்த்த முதல் நாளே’’ என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஹிட் அடித்தது. ஆனால் இப்போது அந்த பாடலை யாரும் ரசிப்பது போல் தெரியவில்லை. மாறாக ‘’மஞ்சல் வெயில்’’ பாடல் இப்போது ட்ரெண்டிங்கில் உள்ளது. சாப்பாடு அதே தான் அதை சாப்பிடும் ரசிகர்களின் மனநிலை ஒவ்வொரு காலக்கட்டத்திலும் மாறி வருகிறது என ஹாரி்ஸ் ஜெயராஜ் கூறியுள்ளார்.