இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில், விசாகப்பட்டினத்தில் நடந்த முதலாவது ஆட்டத்தில் 2 விக்கெட் வித்தியாசத்திலும், திருவனந்தபுரத்தில் நடந்த 2-வது ஆட்டத்தில் 44 ரன் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றது.
கவுகாத்தியில் நடந்த 3-வது ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி கண்டது. தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில், இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சத்தீஷ்கார் தலைநகர் ராய்ப்பூரில் இன்று நடக்கிறது.

: மைதானத்தில் மின்சாரம் துண்டிப்பு:
இந்நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4 வது டி-20 போட்டி நடக்கும் ராய்ப்பூர் ஷஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச மைதானத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.இந்த மைதானத்திற்கு கடந்த 2009ம் ஆண்டு முதல் மின்கட்டணம் செலுத்தப்படவில்லை. ரூ. 3.19 கோடி கட்டணம் நிலுவையில் உள்ள நிலையில், மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்றைய போட்டியை ஜெனரேட்டர்கள் மூலம் இயக்கி நடத்த மைதான நிர்வாகம் முடிவு செய்துள்ளது.