இந்தப் புதிய சேவையின் மூலம் மக்கள் நில அளவைக்கு விண்ணப்பிக்க அலுவலகம் செல்ல வேண்டிய தேவை இல்லை. மேலும் நில அளவர் கையொப்பமிட்ட அறிக்கை/ வரைபடம் ஆகியவற்றை இணைய சேவை வழியாக பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.
நில உரிமையாளர்கள் தங்களின் நிலத்தை அளவீடு செய்ய வட்ட அலுவலங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும். இதனை மாற்றும் வகையில் https://tamilnilam.tn.gov.in/citizen என்ற இணைய முகவரி வாயிலாக இணையத்தில் விண்ணப்பிக்கும் வசதியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (நவ.20) தொடங்கிவைத்தார்.
இந்தப் புதிய சேவையின் மூலம் மக்கள் நில அளவைக்கு விண்ணப்பிக்க அலுவலகம் செல்ல வேண்டிய தேவை இல்லை. மேலும் நில அளவர் கையொப்பமிட்ட அறிக்கை/ வரைபடம் ஆகியவற்றை https://eservices.tn.gov.in என்ற இணைய சேவை வழியாக பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.முன்னதாக, தமிழ்நாடு நிலஅளவை மற்றும் நிலவரித்திட்ட துறை www. tnlandsurvey. tn. gov. in என்ற இணையதளத்தை உருவாக்கியது. இதில், பட்டா மாறுதல் - தமிழ் நிலம் கைப்பேசி செயலி இந்த இணையதளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், உட்பிரிவு மற்றும் உட்பிரிவில்லாத பட்டா மாறுதல் கோரி வரும் விண்ணப்பங்களை உடனுக்குடன் செயல்படுத்த தமிழ்நிலம் (ஊரகம்) மற்றும் தமிழ்நிலம் (நகரம்) மென்பொருள்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.