ஐ.பி.எல் 2024 ஏலம் துபாயில் நடத்தப்பட உள்ள நிலையில், பி.சி.சி.ஐ இப்போது ஒரு படி மேலே சென்று 10 அணிகள் ஒவ்வொன்றிற்கும் 5 கோடி ரூபாய் பர்ஸை உயர்த்தியுள்ளது.
17-வது ஐ.பி.எல் (2024) டி20 கிரிக்கெட் தொடர் அடுத்தாண்டு நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த தொடருக்கான மினி ஏலம் வருகிற டிசம்பர் 18 அல்லது 19ம் தேதி துபாயில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொடரில் பங்கேற்கும் 10 அணிகளும் நவம்பர் 15 ஆம் தேதிக்குள் வீரர்கள் தக்கவைப்பு பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.பி.எல் 2024 ஏலம் துபாயில் நடத்தப்பட உள்ள நிலையில், பி.சி.சி.ஐ இப்போது ஒரு படி மேலே சென்று 10 அணிகள் ஒவ்வொன்றிற்கும் 5 கோடி ரூபாய் பர்ஸை உயர்த்தியுள்ளது. இனி, அனைத்து அணிகளும் 100 கோடி ரூபாய் பர்ஸ் வைத்திருக்கும். தொடரில் பங்கேற்றுள்ள 10 அணிகளில் பஞ்சாப் கிங்ஸ் அணி மட்டுமே அதிக தொகையை கையிருப்பாக வைத்துள்ளது. அந்த அணி ரூ. 12.20 கோடி பர்ஸ் தொகையை கொண்டுள்ளது. மும்பை இந்தியன்ஸ் ரூ. 5 லட்சம் என்கிற குறைந்த பர்ஸைக் கொண்டுள்ளது.
மீதமுள்ள அணிகளில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் ரூ. 6.55 கோடியும், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் இரண்டும் 4.45 கோடியும், வைத்துள்ளன. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ரூ. 3.55 கோடியும், ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ. 3.35 கோடியும் கையிருப்பாக வைத்துள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ரூ. 1.75 கோடியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ரூ. 1.65 கோடியும், நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ. 1.5 கோடியும் வைத்துள்ளது.