திராட்சையில் சத்துகள், ஆண்டி ஆக்ஸிட்ண்ட், வைட்டமின்ஸ் மற்றும் மினரல்ஸ் உள்ளது. இந்நிலையில் நாம் ஏன் திராட்சையை ஊற வைக்க வேண்டும் என்பதை இதில் தெரிந்துகொள்ளலாம். திராட்சையில் சத்துகள், ஆண்டி ஆக்ஸிட்ண்ட், வைட்டமின்ஸ் மற்றும் மினரல்ஸ் உள்ளது. இந்நிலையில் நாம் ஏன் திராட்சையை ஊற வைக்க வேண்டும் என்பதை இதில் தெரிந்துகொள்ளலாம்.
இதில் அதிக ஆண்டி ஆக்ஸிடண்ட் உள்ளது. இதை ஊறவைப்பதால், அதிக ஆண்டி ஆக்ஸிடண்ட் உடலுக்கு கிடைக்க உதவும். இந்த ஆண்டி ஆக்ஸிடண்ட் உடலை பாதிப்பிலிருந்து காப்பாற்றி, ஒட்டுமொத்த உடல் இயக்கத்திற்கும் உதவுகிறது.இதில் பொட்டாஷியம் உள்ளது. இந்த சத்து உடலில் உள்ள உப்பின் அளவை சீராக்கி, ரத்த அழுத்தத்தை சீராக வைத்துகொள்ளும். மேலும் இதில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்ட், நார்சத்து ரத்த குழாய்களில் உள்ள இருக்கமான தன்மையை குறைத்து, ரத்த அழுத்த அளவை குறைக்கும்.
ஊறவைத்த திராட்சையில் உள்ள நார்சத்து இது மலச்சிக்கலை குணப்படுத்தும். குடல் ஆரோக்கியத்திற்கு உதவியாக இருக்கும். வயிற்றின் செயல்பாடுகளை ஆரோக்கியமாக மாற்றும்.இதில் இரும்பு சத்து அதிகம். ஆனால் இந்த இரும்பு சத்தை உடலால் எடுத்துகொள்ள முடியாத, நிலை ஏற்படுகிறது. இந்நிலையில் நாம் ஊற வைத்து சாப்பிடும்பொது, இரும்பு சத்தை உடல் ஏற்றுக்கொள்ளும். மேலும் ஊறவைப்பதால், திராச்சை சுத்தமடையும், இதனால் அதில் உள்ள அசுத்தம் நம்மை பாதிக்காது.