உலகின் மிகவும் பிரபலமான மின்னஞ்சல் சேவையான ஜிமெயில் பல்வேறு ஏ.ஐ-ல் இயங்கும் அம்சங்களைக் கொண்டுள்ளது. ஜெனரேட்டிவ் ஏ.ஐ 'ஹெல்ப் மி ரைட்' மிகுவும் பயனுள்ளதாக இருந்து வரும் நிலையில் தற்போது 'டிராஃப்ட் வித் வாய்ஸ்' (Draft email with voice) அம்சம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.இந்த அம்சம் மூலம் பயனர்கள் இமெயிலை டைப் செய்யாமல், மெயில் குறித்து பேசினால் அதுவாக டைப் செய்யும் படி வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.
ஜிமெயில் பக்கம் சென்றால் பெரிய மைக் போன்ற பட்டன் 'டிராஃப்ட் இமெயில் வித் வாய்ஸ்' பெயருடன் பட்டன் இடம் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த மைக் கிளிக் செய்யும் போது ரெக்காட்டிங் ஆன் ஆகி விடும். நிறுத்த வேண்டும் என்றால் அதே பட்டனை கொடுத்தால் ஆப் ஆகும். பேசி முடித்து விட்டால் அங்கிருக்கம் ‘Create’ பட்டனை கொடுக்க வேண்டும்.
அப்போது ஏ.ஐ பயன்படுத்தி நீங்கள் கூறியது டைப் செய்யப்பட்டு வரும். பயனர்கள் ஜிமெயிலை அனுப்பும் முன் அதை சரிபார்த்து எடிட் செய்து கொள்ளலாம்.நீங்கள் ஜிமெயில் டைப் செய்து அனுப்ப கூடிய சூழ்நிலையில் இல்லை என்றால் இந்த ஆப்ஷனை பயன்படுத்தி பேசி எளிதில் அனுப்பலாம்.
இந்த அம்சம் கூகுள் கீபோர்டில் வரும் speak-to-type அம்சம் போல் உள்ளது என்றால் இது ஜெனரேட்டிவ் ஏ.ஐ பயன்படுத்துகிறது மற்றும் ஜிமெயில் உடன் வருவதாக உள்ளது. தற்போது சோதனை செய்யப்பட்டு வரும் அம்சம் எப்போது அனைவரது பயன்பாட்டிற்கும் வரும் என்பது குறித்து இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.