தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 12ம்தேதிக்கு முன்பாகவே ரூ.1000 உரிமைத் தொகையை வழங்க ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் கலைஞர் மகளீர் தொகை கோரி மேல்முறையீடு செய்த 11.85 லட்சம் விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை தொடங்கி உள்ளது.

தமிழ்நாட்டில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் 15 தேதி தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் மூலமாக இதுவரை 1 கோடி 6 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.
இந்நிலையில் இத்திட்டத்தில் நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டது. மேலும் விடுபட்டவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டது. இதை முன்னிட்டு இதுவரை 11.85 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இதுவரை வந்துள்ள விண்ணப்பங்களில் யார் தகுதியானவர்கள் என்று பரிசீலனை செய்யப்பட உள்ளது. இந்நிலையில் இந்த மாதம் இறுதிக்குள் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதியானார்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும் என்று கூறப்படுகிறது.தீபாவளி பண்டிகை நவம்பர் 12ம் தேதி கொண்டாடப்படுவதால், முன்கூட்டியே தொகையை வழங்குவது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருகிறது.