கண்ணதாசனுடன் தனக்கு தெரியாமல் தனது படத்தில் அவர் எழுதிய பாடலை, ஏற்றுக்கொண்ட எம்.ஜி.ஆர் அந்த பாடலுக்கு பாராட்டு தெரிவித்த்தோடு, அந்த பாடல் எழுதிய கவிஞா வாலி என்று இயக்குனர் சொன்ன பொய்யையும் கண்டுபிடித்துள்ளார்.தமிழ் சினிமாவில் புதுமை இயக்குனர் என்று போற்றப்படுபவர் ஸ்ரீதர். வென்னிற ஆடை, காதலிக்க நேரமில்லை உள்ளிட்ட பல ஃபீல் குட் திரைப்படங்களை இயக்கியுள்ள இவர், எம்.ஜி.ஆ நடிப்பில் இயக்கிய படம் உரிமைக்குரல். கடந்த 1974-ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் எம்.ஜி.ஆர், லதா, நம்பியார், நாகேஷ், அஞ்சலி தேவி, வி.கே.ராமசாமி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
எம்.ஸ்.விஸ்வநாதன் இந்த படத்திற்கு இசையமைக்க, வாலி கண்ணதாசன் இருவரும் பாடல்கள் எழுதியிருந்தனர். பொதுவாக தனது படங்களின் டியூன் மற்றும் பாடல் வரிகளை எம்.ஜி.ஆர் தான் தேர்வு செய்வார். அவர் சரி என்று சொன்னால் தான் அந்த பாடல் பதிவாகும் நிலை இருந்த்து. ஆனால் இது தெரியாத இயக்குனர் ஸ்ரீதர், படத்தின் பாடல்களை எம்.ஜி.ஆருக்கு தெரியாமல் பதிவு செய்துள்ளார்.
இதை தெரிந்துகொண்ட அந்த படத்தின் தயாரிப்பு நிர்வாகி, எம்.ஜி.ஆர் படததில் பாடல் வரிகள், டியூன் என அனைத்தையும் அவர் தான் தேர்வு செய்வார். அது தெரியாமல் இப்படி செய்துவிட்டீர்களே என்று சொல்ல, ஸ்ரீதர் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துள்ளார். அதேபோல் அந்த காலக்கட்டத்தில் எம்.ஜி.ஆர் கண்ணதாசன் இடையே மோதல் இருந்ததால், கண்ணதாசன் எழுதிய பாடலை எம்.ஜி.ஆர் எப்படி ஏற்றுக்கொள்வார் என்று நினைத்துள்ளார்.
இது குறித்து கவியரசர் கண்ணதாசனிடம் ஸ்ரீதர் சொல்ல, நான் எழுதிய பாடல்களை வாலி தான் எழுதினார் என்று சொல்லுங்கள் எனக்கு எந்த ஆச்சேபனையும் இல்லை என்று கூறியுள்ளார். அதன்பிறகு ஒருநாள் எம்.ஜி.ஆர் பாடல்கள் குறித்து விசாரிக்க, பாடல்கள் பதிவு செய்யப்பட்டுவிட்டது என்று ஸ்ரீதர் கூறியுள்ளார். சிறிது நேரம் யோசித்த எம்.ஜி.ஆர் பாடல்களை போடுங்க்ள என்று சொல்ல, ஸ்ரீதர் அனைத்து பாடல்களையும் போட்டு காட்டியுள்ளார்.