நடிகர் சிம்பு நடிகை வரலட்சுமி இருவரும் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து இருவருமே விளக்கம் அளித்துள்ளது.தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிம்பு, கமல்ஹாசன் தயாரிப்பில் தனது அடுத்த படத்திற்கான பணிகளில் பிஸியாக இருந்து வருகிறார். அதேபோல் நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமார், தமிழில் நாயகியாகவும், தெலுங்கில் முன்னணி வில்லி நடிகையாகவும் முத்திரை பதித்து வருகிறார்.
கடந்த 2012-ம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான போடா போடி படத்தில் சிம்பு – வரலட்சுமி இருவரும் இணைந்து நடித்திருந்தனர். தற்போது 40 வயதாகும் சிம்பு இன்னும் திருமணம் செய்துகொள்ளாத நிலையில், தனது பிறந்த நாளான பிப்ரவரி 3-ந் தேதி திருமணம் குறித்து அறிவிக்க உள்ளதாக தெரிவித்திருந்தார்.
இதனை வைத்து சிம்பு வரலட்சுமி இருவரும் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியானது. மேலும் டி.ராஜேந்திரன் மகன் என்ற வாரிசு அடையாளத்துடன் சிம்புவும், சரத்குமாரின் மகள் என்ற அடையாளத்துடன் வரலட்சுமியும் சினிமாவுக்கு நுழைந்து தங்களுக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்டுள்ளனர்.