லியோ பாக்ஸ் ஆபிஸ் வசூல் நாள் 9: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'தளபதி' விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படம் நேற்று (அக் 27) ரூ.7 கோடி வசூலித்தது.
தளபதி விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள லியோ திரைப்படம தற்போது உலகளவில் ரூ500 கோடி வசூலை நோக்கி நகர்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இந்தியாவில் இதுவரை 271.25 கோடி வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் வெளியான படம் லியோ. த்ரிஷா சஞ்சய் தத், அர்ஜூன், கௌதம்மேனன் உள்ளிட்ட இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ள இந்த படம் கடந்த அக்டோபர் 19-ந் தேதி வெளியானது. வெளியான நாளில் இருந்து வசூலில் பல்வேறு சாதனைகளை செய்து வரும் லியோ படத்திற்கு சிலர் கலவையான விமர்சனங்களை கொடுத்து வருவதால் படத்திற்கு வரவேற்கு அடுத்தடுத்த நாட்களில் குறை தொடங்கியது.
இதனிடையே லியோ படம் வெளியாகி ஒரு வாரத்தில் (7 நாட்கள்) உலகளவில் சுமார் 461 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது லியோ திரைப்பம் உலகம் முழுவதும் ரூ.500 கோடி வசூலை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. லியோ அக்-27 (நேற்று) ரூ. 7 கோடி வசூலித்ததாக மார்க்கெட் டிராக்கர் சாக்னில்க் கூறியுள்ளது.
திங்கள் ரூ.39 கோடி, செவ்வாய் ரூ.34 கோடி வசூல் செய்த லியோ புதன்கிழமை வசூலில் கிட்டத்தட்ட 56 சதவீதம் சரிவைச் சந்தித்து ரூ.13 கோடியை வசூலித்தது. வியாழன் அன்றுரூ 9 கோடி வசூலித்தது. இதன் மூலம் இந்தியாவில் மொத்த பாக்ஸ் ஆபிஸ் வசூல் தற்போது ரூ 271.25 கோடியை எட்டியுள்ளது. லியோ வெள்ளிக்கிழமை ஒட்டுமொத்தமாக 29.27% தமிழ் ஆக்கிரமிப்பைப் பெற்றுள்ளது.
லோகேஷ் கனகராஜின் சினிமா பிரபஞ்சத்தின் ஒரு பகுதியாக வெளியான லியோ படம், கார்த்தியின் கைதி மற்றும் கமல்ஹாசனின் விக்ரம் ஆகிய நிகழ்வுகளுக்குப் பிறகு நடப்பது போல் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது லியோ திரைப்படம் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் மற்றும் 2.0 ஆகிய இரண்டு படங்களுக்கு பிறகு அதிக வசூல் செய்த மூன்றாவது தமிழ் திரைப்படமாகும். லியோ உலகம் முழுவதும் தற்போது ரூ. 476 கோடி வசூலித்துள்ளது.
உலகளவில் ரூ.604 கோடி வசூலித்து இந்த ஆண்டின் மிகப்பெரிய தமிழ்ப் படமான ரஜினிகாந்தின் ஜெயிலருக்கு போட்டி லியோ பார்க்கப்படுகிறது. ஜெயிலர் படம் வெளியாகி முதல் ஒன்பது நாட்களில்,ரூ 245 கோடி வசூலித்தது, லியோ ரூ 271 கோடி வசூலித்துள்ளது. ஜெயிலர் இறுதியில் இந்தியாவில் மொத்தம் ரூ 344 கோடியை வசூலித்துள்ளது. மேலும் இந்த எண்ணிக்கையை லியோ கடக்க முடியுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.