கார் பிரியர்கள் மிகவும் எதிர்பார்த்த புதிய தலைமுறை மாருதி சுஸூகி ஸ்விஃப்ட் (Maruti Swift) கார் வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. கார் பிரியர்கள் மிகவும் எதிர்பார்த்த புதிய தலைமுறை மாருதி சுஸூகி ஸ்விஃப்ட் (Maruti Swift) கார் வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. சுஸூகி நிறுவனம் கடந்த மாதம் ஜப்பானில் நடந்த டோக்கியோ நடந்த மோட்டார் ஷோவில் இந்தக் காரை முதன்முறையாக அறிமுகம் செய்தது.
இந்நிலையில் கடந்த வாரம் இந்தியாவில் மாருதி ஸ்விஃப்ட் காரின் சோதனைகள் தொடங்கியுள்ளன. இந்தப் புதிய ஸ்விஃப்ட் காமின் படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளன. இந்நிலையில், 2024ஆம் ஆண்டில் இந்தக் கார் விற்பனைக்கு வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2024ஆம் ஆண்டின் மத்தியில் இந்தியாவிலும் இந்தக் கார் கிடைக்கத் தொடங்கும் என்று சொல்லப்படுகிறது.
இத்துடன் ஸ்விஃப்ட் ஸ்போர்ட்ஸ் (Swift Sports) என்ற புதிய மாடலையும் மாருதி நிறுவனம் அறிமுகப்படுத்த இருக்கிறது. இந்தக் கார் ஸ்விஃப்ட் காரின் ஸ்போர்ட்ஸ் எடிஷனாக இருக்கும் என்று தெரிகிறது. ஸ்விஃப்ட் ஸ்போர்ட் கார் 2024ஆம் ஆண்டு மத்தியில், அதாவது ஏப்ரல் அல்லது மே மாதம் விற்பனைக்கு வரலாம் என்று கூறப்படுகிறது.
இந்தக் ஸ்விஃப்ட் கார்கள் லிட்டருக்கு 40 கி.மீ. வரை மைலேஜ் கொடுப்பவையாக இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறப்பான மைலேஜ் காரணமாகவே ஸ்விஃப்ட் கார்கள் மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. ஹைபிரிட் காராக இருப்பதால் விலையும் அதற்கு ஏற்ப ஜாஸ்தியாக இருக்கும் என்று கருதப்படுகிறது.