பல இடங்களில் இன்னும் பழைய நிலை திருப்பாத நிலையில், மக்கள் தங்களது அன்றாட தேவைகளுக்காக அடுத்தவர்களின் உதவியை நாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.நாளை மாலைக்குள் அனைத்து இடங்களிலும் மழைநீர் வெளியேற்றப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
சென்னையில் தொடர் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது நிலைமை சீரமைக்கப்பட்டு மக்கள் தங்களது வழக்கமான பணிகளை செய்ய தொடங்கியுள்ளனர். ஆனாலும் பல இடங்களில் இன்னும் பழைய நிலை திருப்பாத நிலையில், மக்கள் தங்களது அன்றாட தேவைகளுக்காக அடுத்தவர்களின் உதவியை நாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமூக ஆர்வலர்கள், சின்னத்திரை பிரபலங்கள் என பலரும் உதவிக்கரம் நீட்டி வரும் நிலையில், அத்தியாவசிய பொருட்களை வழங்கி அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இதனிடையே சென்னையில் பல இடங்களில் தந்போதுவரை மழை நீர் வெளியேற்றப்படாத நிலையில்,வட சென்னை பகுதிகளில், மீட்புகள் தொடங்கப்படவே இல்லை என்று தகவல் வெளியாகி இருந்தது.இந்நிலையில், தற்போது சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என்.நேரு, நாளை மாலைக்குள் மழைநீர் அகற்றும் பணி நிறைவடையும் என்று கூறியுள்ளார். மேலும் இதுவரை 20 ஆயிரம் டன் குப்பைகள அகற்றப்பட்டுள்ளதாக கூறியுள்ள அவர், குப்பைகயைள அகற்றும் பணி இன்னும் இரண்டொரு நாட்களில் முடிவடையும் என்றும் தேவைப்படும் இடங்களில் மருத்துவ முகாம் நடத்தப்படும் கூறியுள்ளார்.