“மணிப்பூர் மாநிலத்தில் பிரச்னையால் பயிற்சி பெற முடியாத வீரர்-வீராங்கனைகளுக்கு தமிழ்நாட்டில் பயிற்சி வழங்கினோம். இதுதான் திராவிட மாடல்” என கேலோ இந்தியா தொடக்க விழாவில் மு.க. ஸ்டாலின் கூறினார். கேலோ இந்தியா போட்டிகள் தொடக்க நிகழ்ச்சி சென்னைநேரு ஸ்டேடியத்தில் நடந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு விளையாட்டுப் போட்டிகளை தொடங்கிவைத்தார்.
இந்த விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் எனப் பலர் கலந்துகொண்டார்கள்.இந்த விழாவில் பேசிய மு.க. ஸ்டாலின், ““மணிப்பூர் மாநிலத்தில் பிரச்னையால் பயிற்சி பெற முடியாத வீரர்-வீராங்கனைகளுக்கு தமிழ்நாட்டில் பயிற்சி வழங்கினோம். இதுதான் திராவிட மாடல்” எனப் பேசினார்.
தொடர்ந்து, “திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக்க உழைத்து வருகிறோம். திமுக அரசு பதவியேற்ற பின்னர் செஸ் ஒலிம்பியாட் உள்பட பல்வேறு போட்டிகளை நடத்தியுள்ளோம்” என்றார்.தொடர்ந்து, “அன்பு பாலத்தையும் சமூக நல்லிணக்கத்தையும் உருவாக்குவது விளையாட்டு. தமிழ்நாட்டின் பாரம்பரிய சிலம்பம் டெமோ விளையாட்டாக சேர்க்கப்பட்டுள்ளது.
விளையாட்டையும் வளர்ச்சிக்கான இலக்காக செயல்பட்டு வருகிறோம். எல்லோருக்கும் எல்லாம், அனைவருக்கும் அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சியே எங்கள் இலக்கு” என்றார்.தொடர்ந்து, “சென்னை, மதுரை, திருச்சி, நீலகிரியில் ஒலிம்பிக் அகாடமி மினி ஸ்டேடியம் அமைக்கப்படுகிறது” என்றார்.