எழுத்தாளர் ஜெயகாந்தன் உடல் நலம் குன்றி இருந்தபோது மருத்துவ செலவிற்கு கலைஞர் பண உதவி செய்தார் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். எழுத்தாளர் ஜெயகாந்தன் உடல் நலம் குன்றி இருந்தபோது மருத்துவ செலவிற்கு கலைஞர் பண உதவி செய்தார் என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.முன்னாள் முதலமைச்சர் கலைஞர் பிறந்த நூற்றாண்டு விழாவை தமிழ்த்திரையுலகம் விழாவாக கொண்டாடியது. இந்த நிகழ்வு நேற்று சென்னையில் நடைபெற்றது. கடந்த டிசம்பர் 24ம் தேதி நடக்கவிருந்த நிகழ்வு, ஜனவரி 6-க்கு மாற்றப்பட்டது. கிண்டி ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.இந்த நிகழ்வில் கமல், ரஜினிகாந்த், சூர்யா, வடிவேல், கார்த்தி, தனுஷ், பார்த்திபன், சிவகார்த்திகேயன், சிவக்குமார், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் ரஜினிகாந்த் பேசியதாவது : “ திராவிடர் இயக்கம், திராவிடர் கழகம், அறிஞர் அண்ணா, கலைஞர் குறித்து எழுத்தாளர் ஜெயகாந்தன் வைக்காத விமர்சனமே இல்லை. ஆனால் அவரே உடல் நலம் குன்றி இருந்தபோது மருத்துவத்திற்கு உதவி செய்தவர் கலைஞர். அவர் காலத்தில் வாழ்ந்தோம் என்பது மிகப்பெரிய விஷயம். அவருடன் பேசிப் பழகினோம் என்பது மிகப்பெரிய பாக்கியம்” என்று கூறினார்.
கமல்ஹாசன் பேசுகையில், “என்னடா ஒரு ஓரமாக நின்று பேசுகிறேன் என நினைக்கறீங்களா? கலைஞர் மேடையில் நான் எப்போதும் ஒரு ஓரமாகதான் நிற்பேன்.கலைஞரும் தமிழும், கலைஞரும் சினிமாவும், கலைஞரும் அரசியலும் பிரிக்க முடியாது ஒன்று. எம்.ஜி.ஆர், சிவாஜி ஆகிய ஆளுமைகளை தன் எழுத்தால் உச்ச நட்சத்திரம் ஆக்கியவர். பாடல்கள் பிடியில் இருந்த சினிமாவை வசனம் வசப்படுத்தியவர் கலைஞர்.வாய்ப்பு கிடைக்கும் போது எல்லாம் கலைஞர் மக்களுடன் உரையாடுவதை விடவே கூடாது என நான் அவரிடம் கற்று கொண்டேன். அதைதான் பிக்பாஸ் மூலம் மக்களோடு பேசி கொண்டு இருக்கிறேன்.
கலைஞர் எப்போதும் தன்னை கலை உலகின் பிரதிநிதியாகவே காட்டிக்கொள்ள விரும்பினார். மறைந்த தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தை சிறப்பாக நடத்தி தந்த முதலமைச்சர் ஸ்டாலின் அரசியல் பண்புக்கு வணக்கத்தை தெரிவித்துகொள்கிறேன்.கலைஞரின் பண்பு முதல்வரிடம் உள்ளது. ” என்று கூறியுள்ளார்.