கருப்பை வாய்ப் புற்றுநோய் ஏற்படாமல் தடுக்க மத்திய அரசு எச்.பி.வி தடுப்பூசிகளை, 9 முதல் 14 வயது பெண் குழந்தைகளுக்கு செலுத்த உள்ளது.இந்தியாவில் இரண்டாவது அதிகமாக உள்ள புற்றுநோய்யாக இந்த கருப்பை வாய்ப் புற்று நோய் கருதப்படுகிறது. இந்நிலையில் இது ஏற்படாமல் தடுக்க 9 முதல் 14 வயது பெண் குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இந்த தடுப்பூசி செலுத்தும் பணி 3 கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த வருடத்தின் இரண்டாவது பாதியில் இது தொடங்குகிறது.
முதல் கட்டத்தை தொடங்க இந்திய அரசிடம் 6 முதல் 7 கோடி தடுப்பூசிகள் தேவையாக உள்ளது. இந்த தடுப்பூசி கருப்பை வாய்ப் புற்றுநோய்யை தடுப்பதோடு, தொண்டை, பெண் பிறப்புறுப்பு புற்றுநோய், ஆசனவாய் புற்றுநோய் ஆகியவற்றையும் ஏற்படாமல் தடுக்கும்.இந்த தடுப்பூசியின் 2 டோஸ்கள் தற்போது விற்பனையில் உள்ளது. ஒரு டோஸ் தடுப்பூசி ரூ.2000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மத்திய அரசு தடுப்பூசிகளை செலுத்தத் தொடங்கும்போது, இலவசமாக கிடைக்கும்.
இது தொடர்பாக அரசு அதிகாரி கூறுகையில் “9 முதல் 14 வயதை சேர்ந்த பெண் குழந்தைகள் ஒவ்வொரு வருடமும் தடுப்பூசி செலுத்தப்படுவார்கள். தேர்வு செய்யப்படும் மாநிலங்களில் உள்ள 9 வயது ஆகும் பெண் குழந்தைகளுக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்படும்” என்று தெரிவித்தார்.9 முதல் 14 வயதுடைய 8 கோடி பெண் குழந்தைகள், இந்த தடுப்பூசி செலுத்தும் தகுதி உடையவர்களாகிறார்கள். இதை நாம் 3 ஆண்டுகளுக்கு பிரித்துக்கொள்ள வேண்டும். எல்லா வருடமும் 2.6 கோடி பெண் குழந்தைகள் இந்த தடுப்பூசி செலுத்திகொள்ள தகுதி உடையவர்கள் ஆவார்கள் என்று அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
2.6 கோடி பெண் குழந்தைகள் மட்டும் மில்லாது, 50 லட்சம் முதல் 1 கோடி பெண் குழந்தைகளுக்கு கூடுதலாக தடுப்பூசி தேவைப்படும். இவர்கள் 9- வயதை அடைவாரக்ள். ஏற்கனவே தடுப்பூசி செலுத்திக்கொண்ட இடங்களில் இரண்டாம் மற்றும் 3ம் ஆண்டு கூடுதல் தடுப்பூசிகள் தேவைப்படும். இந்த தடுப்பூசி செலுத்தும் பணி பள்ளிகள் மற்றும் ஏற்கனவே தடுப்பூசி செலுத்தும் மையங்களில் நடைபெற உள்ளது.