ஹேக்கத்தான் மொத்தம் 4 சுற்றுகளாக நடத்தப்படும். இதில் முதல் இடம் பெறும் அணிக்கு ரூ.10 லட்சம் பரிசாக வழங்கப்படும்.
இ-காமர்ஸ் தளங்களில் டார்க் பாட்டர்ன்ஸ் கண்டறியக்கூடிய புதுமையான அப்ளிகேஷன் அல்லது மென்பொருள் அடிப்படையிலான தீர்வை வடிவமைக்க ‘Dark Patterns Buster Hackathon 2023’ஐ மத்திய அரசு வியாழன் அன்று அறிமுகப்படுத்தியது.IIT- பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்துடன் இணைந்து நுகர்வோர் விவகாரத் துறை (DoCA) இந்த ஹேக்கத்தானை ஏற்பாடு செய்துள்ளது.ஹேக்கத்தான் மொத்தம் 4 சுற்றுகளாக நடத்தப்படும். இதில் முதல் இடம் பெறும் அணிக்கு ரூ.10 லட்சம் பரிசாக வழங்கப்படும்.
இரண்டாவது, மூன்றாவது, நான்காவது மற்றும் ஐந்தாம் பரிசுகள் முறையே, ஐந்து லட்சம், மூன்று லட்சம், இரண்டு லட்சம் மற்றும் ஒரு லட்சம் ரூபாய். உலக நுகர்வோர் உரிமைகள் தினத்தன்று (World Consumer Rights Day) பரிசு விநியோகம் நடைபெறும்.தற்போது, சில ஆன்லைன் தளங்களில் டார்க் பாட்டர்ன்ஸ் கண்டறிய இந்தியாவிலோ அல்லது வெளிநாட்டிலோ கருவிகள் எதுவும் இல்லை. இந்த சிக்கலைச் சமாளிப்பதற்கான தீர்வைக் காண நடவடிக்கை எடுக்கும் முதல் நாடு இந்தியாவாகும்.
அனைத்து வகையான நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளிலிருந்தும் நுகர்வோருக்குப் பாதுகாப்பை வழங்கக்கூடிய புதுமையான அப்ளிகேஷன் அல்லது மென்பொருள் அடிப்படையிலான தீர்வை வடிவமைப்பதே இந்த முயற்சியின் நோக்கம், என்று நுகர்வோர் விவகாரங்கள் துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.