ராதிகா சரத்குமார் தனது 45 ஆண்டுகளாக திரை வாழ்க்கையில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். தமிழில் கடைசியாக இவரது நடிப்பில் சந்திரமுகி 2 படம் வெளியானது.
80-90-களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்த ராதிகா இந்தியாவை தாண்டி தற்போது பிரெஞ்சு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா சினிமாவின் அடையாளம் என்று போற்றப்படும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகவேல் என்று பெயர் பெற்ற எம்.ஆர்.ராதா. இவரது மகள் ராதிகா. 1978-ம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான கிழக்கே போகும் ரயில் என்ற படத்தின் மூலம் தனது திரையுலக பயணத்தை தொடங்கிய இவர், தனது 45 ஆண்டுகளாக திரை வாழ்க்கையில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.
தமிழில் கடைசியாக இவரது நடிப்பில் சந்திரமுகி 2 படம் வெளியானது. ராதிகா 2001-ம் ஆண்டு சக நடிகர் சரத்குமாரை திருமணம் செய்துகொண்டார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்துள்ள நடிகை ராதிகா, சின்னத்திரையிலும் பல சீரியல்களில் நடித்துள்ளார். குறிப்பாக இவரது நடிப்பில் ஒளிபரப்பான சித்தி சீரியல் மாபெரும் வெற்றி பெற்றது.
பல இந்திய மொழிகளில் நடித்து வரும் நடிகை ராதிகா சரத்குமார், தற்போது முதல் முறையாக பிரெஞ்சு மொழிப் படத்தில் நடிக்கவுள்ளார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பிற்காக பிரான்ஸ் சென்றுள்ள அவர் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். மேலும், தன்னை இந்த படத்தில் நடிக்க ஊக்குவித்த கணவர் சரத்குமார் மற்றும் மகள் ரயான் மிதுனுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.