மதியம் சாப்பாட்டிற்கு சுவையான புதுவிதமான முட்டைக் கோஸ் கிரேவி செய்வது குறித்து இங்கு பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
முட்டைக் கோஸ் – கால் கிலோ
கடலைப் பருப்பு – 100 கிராம்
காய்ந்த மிளகாய் – 3
எண்ணெய் – 1 டீஸ்பூன்
கடுகு – அரை டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்,
வெங்காயம் – 1
பச்சை மிளகாய் – 2
தேங்காய் – அரை மூடி (அரைத்து எடுக்கவும்)
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை
முதலில் ஒரு கடாய் எடுத்து அதில் கடலைப் பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து எண்ணெய் விடாமல் வறுத்து எடுக்கவும். முட்டைக் கோஸை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இப்போது அதே கடாயில் ண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். இவை வதங்கியதும் நறுக்கிய முட்டைக் கோஸ் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும். இப்போது இதோடு அரைத்த தேங்காய் விழுது, பொடித்த கடலைப்பருப்பு மிளகாய் கலவை, உப்பு, கறிவேப்பிலை சேர்க்கவும் கொதிக்க விடவும். கலவை கிரேவி பதத்திற்கு வந்ததும் இறக்கலாம். அவ்வளவு முட்டைக் கோஸ் தேங்காய் கிரேவி ரெசிபி ரெடி.