தற்போதைய 7.1% வட்டி விகிதத்தில், பிபிஎஃப் (PPF) கணக்கில் ரூ.9000 மாதாந்திர முதலீடு 15 ஆண்டுகளில் ரூ.29.2 லட்சமாக உயரும். இந்த முதலீடு குறித்து பார்க்கலாம்.
PPF | பொது வருங்கால வைப்பு நிதி (PPF) திட்டம் முதலீட்டாளர்களுக்கு மூன்று மடங்கு வரி சலுகைகளை வழங்குகிறது. PPF கணக்கில் முதலீடு செய்யப்பட்ட தொகையை வருமான வரிச் சட்டத்தின் 80C பிரிவின் கீழ் விலக்காகக் கோரலாம். இதில் சம்பாதித்த வட்டிக்கும் வரி விலக்கு உண்டு.
இந்த பிபிஎஃப் கணக்குகள் ஆண்டுகளுக்கு பின்னர் ஆண்டுகளுக்கு நீட்டிக்க அனுமதி உண்டு. இதனால் இந்தத் திட்டதில் முதலீடு செய்து ரூ. கோடிக்கும் மேல் வருமானத்தை குவிக்க முடியும்.
தற்போதைய 7.1% வட்டி விகிதத்தில், PPF கணக்கில் 9000 ரூபாய் (நாளொன்றுக்கு ரூ.) மாதாந்திர முதலீடு 15 ஆண்டுகளில் 29.2 லட்சம் முதலீடு செய்திருப்போம்.
ரூ. கோடி சேமிப்பு
ரூ.9000/மாதம் பங்களிப்பைக் கொண்ட பிபிஎஃப் கணக்கு 40 ஆண்டுகளில் ரூ.2.36 கோடியாகவும், 7.1% வட்டியில் 35 ஆண்டுகளில் ரூ.1.63 கோடியாகவும் வளரும்.
அதாவது, ஒருவர் 20 வயது முதல் பிபிஎஃப்-ல் முதலீடு செய்யத் தொடங்கினால், 60 வயதில் ஓய்வுபெறும் போது அவரது கணக்கில் ரூ.2.36 கோடி இருக்கும்.
மேலும், 20 ஆண்டுகளில், ரூ.9000/மாதம் முதலீடு செய்வதன் மூலம் மொத்த முதிர்வுத் தொகை ரூ.47.9 லட்சமாகம், 7.1% வட்டியில் 25 ஆண்டுகளில் ரூ.74.2 லட்சமாகவும் இருக்கும். 30 ஆண்டுகளில், மாதத்திற்கு ரூ.9000 தொடர்ந்து முதலீடு செய்தால், முதிர்வுத் தொகை ரூ.1.11 கோடி ஆகும்.