விஜய் டிவியில் சமீபத்தில் தொடங்கப்பட்ட நீ நான் காதல் என்ற சீரியலில் நாயகனாக நடித்து வரும் நடிகர் பிரேம் ஜேக்கப் திடீரென திருமணம் செய்துகொண்ட நிலையில், அவரது மனைவியும் சீரியல் நடிகை என்பது தெரியவந்துள்ளது.
விஜய் டிவியில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 23-ந் தேதி முதல் ஒளிபரப்பாகி வரும் சீரியல், நீ நான் காதல். வர்ஷினி சுரேஷ், சசி காயத்ரி ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் இந்த சீரியலில், பிரேம் ஜேக்கப் என்பவர் நாயகனாக நடித்து வருகிறார். மலையாள சீரியல்களில் நடித்து பிரபலமான இவர், இந்த சீரியல் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ளார்.
நீ நான் காதல் சீரியல் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இவர், சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார். இதில் அவர் வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பும் கிடைத்து வருகிறது. இதனிடையே தற்போது அவர் தனது திருமண புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். சீரியல் நடிகையான ஸ்வாசிகா என்பரை திருமணம் செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மலையாள சீரியல்களில் நடிக்கும்போது இவருக்கும் பழக்கம் ஏற்பட்டு கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், தற்போது பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டுள்ளனர். இவர்களின் திருமணம் கேரளா மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. இந்த திடீர் திருமணம் குறித்து தகவல் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், பலரும் இந்த ஜோடிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சீரியல் மூலம் பிரேம் ஜேக்கப் தமிழில் அறிமுகமாகியுள்ள நிலையில், அவரது மனைவி ஸ்வாசிகா, வைகை என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகியுள்ளார். கோரிப்பாளையம், சாட்டை, அப்புச்சி கிராமம் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் சீரியலில் ஜோடியாக நடித்து பலர் வாழ்க்கையில் ஜோடியாக இணைந்துள்ள நிலையில், அந்த வரிசையில் தற்போது பிரேம ஜேக்கப் – ஸ்வாசிகா தம்பதி இணைந்துள்ளது.