நீலகிரியில் இன்று அதிகாலை முதல் பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்து வருகிறது. இதுவரை 7 மி மீட்டர் மழை பெய்துள்ளது. நீலகிரியில் கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த கனமழை காரணமாக மலை ரயில் பாதையில் ஏற்பட்ட மண் சரிவுகளால் கடந்த மாதம் 22 தேதி முதல் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் இருந்து உதகை நோக்கி புறப்படும் மலை ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது.
இதனிடையே இன்று முதல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த மலை ரயில் மீண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.நீலகிரியில் இன்று அதிகாலை முதல் பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்து வருகிறது. இதுவரை 7 மி மீட்டர் மழை பெய்துள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் பயணிகளின் பாதுகாப்பு கருதி இன்று இயக்கப்படுவதாக இருந்த நீலகிரி மலை ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
நாளையும் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்திருந்த நிலையில் மேட்டுப்பாளையம் உதகை மலை ரயில் அடுத்ததாக எப்போது இயக்கப்படும் என ரயில்வே நிர்வாகத்தினர்அறிவிப்பதாக தெரிவித்துள்ளனர்.