விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்திய போது, நடிகர் சூர்யா அழுதது நடிப்பு எனக் கூறி விமர்சித்துள்ளார் பிரபல பத்திரிகையாளரும், நடிகருமான பயில்வான் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் டிசம்பர் 28ஆம் தேதி காலை 6.10 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மரணம் ஒட்டுமொத்த திரையுலக பிரபலங்களையும், ரசிகர்களையும், அரசியல் வட்டாரத்தையும் சோகத்தில் ஆழ்த்தியது. இவருடைய உடல் தேமுதிக அலுவலகம் முன்பு இருக்கும், விஜயகாந்துக்கு சொந்தமான இடத்திலேயே சந்தன பேழைக்குள் வைத்து அரசு மரியாதையுடன், 72 குண்டு துப்பாக்கி குண்டுகள் முழங்க அடக்கம் செய்யப்பட்டது.
மேலும் இவருடைய இறுதி ஊர்வலத்தில், ஆயிரக்கணக்கான ரசிகர்களும், பிரபலங்களும், தேமுதிக கட்சி தொண்டர்களும் கலந்து கொண்ட நிலையில்... இறுதிச் சடங்கில் முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி, மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விஜயகாந்த் உயிரிழந்த ஒரு வாரத்திற்கு மேல் ஆகும் நிலையில், தற்போது வரை விஜயகாந்த் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வருகை தந்து வருகின்றனர். அதேபோல் அடுத்தடுத்து பல பிரபலங்கள் விஜயகாந்தின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு, மாலை அணிவித்து கற்பூரம் காட்டி அஞ்சலி செலுத்துவதோடு மட்டுமின்றி விஜயகாந்தின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
விஜயகாந்த் இறப்பின் போது நடிகர் சூர்யா வெளிநாட்டில் இருந்த நிலையில், காரில் சென்று கொண்டிருக்கும் போதே விஜயகாந்த் குறித்து உருக்கமாக பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, சூர்யா தன்னுடைய தந்தை சிவக்குமார், மற்றும் சகோதரன் கார்த்தியுடன் வந்து விஜயகாந்த் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் குலுங்கி குலுங்கி அழுது... கண்ணீர் சிந்திய படி, அஞ்சலி செலுத்தினார். பின்னர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் விஜயகாந்தின் மகன்கள் இருவரையும் சந்தித்து தன்னுடைய ஆறுதலை கூறினார் .இந்த சம்பவம் குறித்து பேசி உள்ள பிரபல சினிமா பத்திரிக்கையாளரும், நடிகருமான பயில்வான் ரங்கநாதன் சூர்யாவை "நீ வீட்டில் இருந்து வரும்போது கிளசரின் போட்டுவிட்டு வந்து விட்டாயா? நீ அழுதால் கேப்டன் வந்து விடுவாரா என பேசி பொளந்து காட்டியுள்ளார்.