அயோத்தியில் ராம் லல்லா கும்பாபிஷேகம் பாரபட்சம் இல்லாத ராம ராஜ்ஜியத்தை நிறுவுவதற்கான தொடக்கத்தைக் குறிக்கிறது என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் திங்கள்கிழமை (ஜன.22,2024) கூறினார்.தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கைகள், யோசனைகள் மற்றும் திட்டங்களுக்கு ராமராஜ்யம் தான் அடிப்படை என்றும் யோகி ஆதித்யநாத் கூறினார்.
மேலும், அயோத்தியின் "பரிக்கிரமா (சுற்றளவு)" யில் யாரும் தடையாக இருக்க மாட்டார்கள் என்றும், அதன் தெருக்களில் துப்பாக்கிச் சூடு அல்லது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படாது என்றும் முதல்வர் மக்களுக்கு உறுதியளித்தார்.பின்னர், "ராமரின் சங்கீர்த்தனம் தெருக்களில் ஒலிக்கும், தீபஸ்தவ் மற்றும் ராமோத்சவ் இங்கு கொண்டாடப்படும்" என்றார். இதற்கிடையில், “பல நூற்றாண்டுகளாக அயோத்தி வேண்டும் என்றே புறக்கணிக்கப்பட்டது. இன்று, நாட்டின் ஒவ்வொரு நகரமும் கிராமமும் அயோத்தி தாமாக மாறியுள்ளது.ஒவ்வொருவரும் ராம் ராம் என அவரின் திருநாமத்தை கூறி ஜெபிப்பதால், அவர்கள் ராம ஜென்ம பூமியில் உள்ளனர். முழு நாடும் (ராம்-மே) ராமரால் நிறைந்தது என்றார்.
துறவிகள், சன்யாசிகள், புரோகிதர்கள், நாகர்கள், அறிவுஜீவிகள், அரசியல்வாதிகள் மற்றும் பழங்குடியினர் வரை சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும் ராமரின் பணிக்காக பங்களித்துள்ளனர்.இதனால், எந்த இடத்தில் உறுதிமொழி எடுக்கப்பட்டதோ, அதே இடத்தில்தான் கோயில் கட்டப்பட்டுள்ளது. பல நூற்றாண்டுகளாக இந்திய சமூகம் கடைப்பிடித்து வரும் பொறுமையை ராமரின் வாழ்க்கை கற்றுக்கொடுக்கிறது, அவர்களின் அர்ப்பணிப்பு ஒவ்வொரு நாளும் வலுப்பெற்றது.இன்று முழு உலகமும் அயோத்தியின் மகத்துவத்தையும் தெய்வீகத்தன்மையையும் பார்த்துக் கொண்டிருக்கிறது. அயோத்திக்கு வருவதற்கு அனைவரும் ஆர்வமாக உள்ளனர்.ஆகவே, இது உலகின் கலாச்சார தலைநகரமாக நிலைபெற்று வருகிறது” என்றார்.
தொடர்ந்து பிரதமரின் அர்ப்பணிப்பு, மன உறுதி மற்றும் தொலைநோக்கு பார்வைக்கு பெருமை கிடைத்துள்ளது. இந்தியாவின் கலாச்சார மறுமலர்ச்சியில் ராம ஜென்மபூமி கோயிலின் வளர்ச்சி இன்றியமையாதது.இது ஒரு ராஷ்டிர மந்திர். ஸ்ரீ ராம் லல்லாவின் பிரான் பிரதிஷ்டை தேசப் பெருமையின் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாகும்” என்றார்.முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ஆகியோரை வரவேற்று, வெள்ளியினால் செய்யப்பட்ட ராமர் கோவில் மாதிரிகளை வழங்கினார்.