கோவையில் வீட்டின் ஒன்றில் காலனி ஸ்டாண்டில் பள்ளி மாணவர் ஷூவில் பதுங்கி இருந்த நாகம் பாம்பை பாம்பு பிடி வீரர் மோகன் என்பவர் லவமாக பிடித்தார்.
கோவை வெள்ளலூர் அடுத்த வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் வசிக்கும் பிரதீப் என்ற எட்டாம் வகுப்பு மாணவன் வழக்கம் போல் வீட்டிற்கு சென்று இருக்கின்றார். அப்போது வீட்டில் காலணி ஸ்டாண்ட் அருகே சென்ற போது ஷூவில் இருந்து ஸ்ஸ்ஸு என்ற சீரும் சத்தம் ஒளித்தது. ஷூவில் உள்ளே பாம்பு இருந்ததனை சிறுவன் பிரதீப் பார்த்தார்.
பிரதீப் பார்த்தவுடன் பாம்பு பிடி வீரர் மோகன் என்பவருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்த தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை சார்ந்த பாம்பு பிடி வீரரான மோகன் பாம்பை லாபகரமாக பிடித்தார்.
பின்னர், பிடிபட்ட பாம்பு வனப்பகுதியில் பத்திரமாக விடப்பட்டது. மழைக்காலத்தில் பாம்புகள் வெளியில் உலா வரும் போது கதகதப்பான இடத்தை நோக்கி நகர்வது வழக்கம். அதன் அடிப்படையில் தா ன் காலணி ரேக்குள் காலணிக்குகள் உள்ளே புகுந்த பாம்பு பத்திரமாக பதுங்கி இருந்துள்ளது.
நகர்ப்புறமாக இருந்தாலும் பொதுமக்கள் இது போன்ற காலங்களில் கவனமாக இருப்பது அவசியம் என்றும், குறிப்பாக தங்கள் உடமைகளை பொதுமக்கள் சரிபார்த்துக் கொள்ள வேண்டியதும் அவசியம் என பாம்பு பிடி வீரர் மோகன் தெரிவித்தார்.