பிஎஸ்இ மற்றும் என்எஸ்இயில் மாலை 6:00 மணி முதல் 6:08 மணி வரை திறந்தநிலை சந்தை அமர்வு நடைபெறும். அன்றைய தினம் மாலை 6 மணி முதல் 7.15 மணி வரை ஒரு மணி நேரம் தீபாவளி முகூர்த்த டிரேடிங் நடைபெறும்.
இந்த ஆண்டு (2023) தீபாவளி நவம்பர் 12ஆம் தேதியன்று கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், முன்னணி பங்குச் சந்தைகளான மும்பை பங்குச் சந்தை (BSE) மற்றும் தேசிய பங்குச் சந்மை (NSE) அன்றைய தினம் மாலை 6 மணி முதல் 7.15 மணி வரை ஒரு மணி நேரம் திறந்திருக்கும்.
இது சிறப்பு முகூர்த்தம் என அழைக்கப்படும். மேலும், பிஎஸ்இ மற்றும் என்எஸ்இயில் மாலை 6:00 மணி முதல் 6:08 மணி வரை திறந்தநிலை சந்தை அமர்வு நடைபெறும்.கமாடிட்டி டெரிவேட்டிவ் பிரிவிலும், முகூர்த்த (முஹுரத்) டிரேடிங் மாலை 6:15 மணி முதல் 7:15 மணி வரை நடைபெறும். இருப்பினும், வர்த்தக மாற்றம் இரவு 7:25 மணி வரை இருக்கும்.
நாணய பிரிவு சந்தையில், வர்த்தக ரத்து கோரிக்கைகளை இரவு 7:30 மணி வரை வைக்கலாம். அழைப்பு ஏலத்தில் வர்த்தக மாற்றம் இரவு 7:40 மணிக்கு முடிவடையும். தீபாவளி 2023 முஹுரத் வர்த்தக அமர்வில் இந்திய பங்குச் சந்தையில் அனைத்து வர்த்தகங்களும் செய்யப்படும்.