பஞ்சாப் நேஷனல் வங்கி ரூபாய் 2 கோடிக்கும் குறைவான ஃபிக்ஸட் டெபாசிட் வட்டி விகிதங்களை 50 அடிப்படை புள்ளிகள் வரை திருத்தி உள்ளது. திருத்தப்பட்ட இந்த புதிய விகிதங்கள் ஜனவரி, 1, 2024 முதல் அமலுக்கு வந்துள்ளன.
வங்கி 180 முதல் 270 நாட்கள் வரையிலான வட்டி விகிதங்களை 50 பிபிஎஸ் உயர்த்தியுள்ளது. இந்த டெர்ம் டெபாசிட்கள் மூலம் தற்போது பொது குடிமக்களுக்கு 6% வட்டி கிடைக்கும். மேலும், பஞ்சாப் நேஷனல் வங்கி FD விகிதங்களை 271 நாள்களில் 45 bps உயர்த்தி 1 வருடத்திற்கும் குறைவான காலத்திற்கு உயர்த்தியுள்ளது.
இந்த ஃபிக்ஸட் டெபாசிட்டுகள் பொது குடிமக்களுக்கு 7.25% வட்டிவிகிதத்தை அளிக்கும். 400 நாட்கள் முதிர்வு காலத்தின் போது, பஞ்சாப் நேஷனல் வங்கி 6.80% இலிருந்து 7.25% ஆக 45 bps விகிதங்களை உயர்த்தியுள்ளது.திருத்தத்திற்குப் பிறகு, PNB பொதுக் குடிமக்களுக்கு 7 நாட்கள் முதல் பத்து ஆண்டுகளில் முதிர்ச்சியடையும் வைப்புத் தொகையில் 3.5% முதல் 7.25% வரை வழங்குகிறது.